Sivaji|Kamal |Thotta Tharani|சிவாஜி, கமலுக்கு அடுத்து இவர் தான்.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை
பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது பிரபல கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் பிரமாண்ட செட் அமைப்பவர்.. கற்பனைக்கு உயிரூட்டி வியக்க வைக்கும் கலை படைப்பை கொடுப்பபவர் என்றால் ரசிகர்கள் நினைவுக்கு முதலில் வருவது தோட்டா தரணிதான்...
நாயகன், இந்தியன், சிவாஜி, தசவாதாரம் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை தனித்துவ செட்டால் இந்தியாவையே வியக்க வைத்தவர்..
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலியப் படங்களிலும் செட் அமைப்பதில் வித்தை காட்டியுள்ளார் தோட்டா தரணி...
இவரது திறமையை இந்திய திரையுலகமே கொண்டாடி தீர்க்க, தற்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் அரசு கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் விருதை வழங்கி வரும் நிலையில், கலை உலகில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக தோட்டா தரணிக்கு அந்நாட்டு அரசின் உயரிய விருதான செவாலியர் விருதை அறிவித்துள்ளது
சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவாஜி கணேசன், கமல்ஹாசன் வரிசையில், செவாலியர் விருதை ஏந்தும் வித்தகராகி தமிழ் மற்றும் இந்திய சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளார் தோட்டா தரணி..
