நமக்கு நாமே வாழ்க கோஷம் போடும் நாள் விரைவில் வரும் - சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்

மற்றவர்களுக்கு வாழ்க கோஷம் போட்ட காலம் முடிந்து நமக்கு நாமே வாழ்க கோஷம் போடும் நாள் விரைவில் வர உள்ளதாக சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்க, அரங்கத்தில் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிவாஜியின் மூத்த ரசிகர்களை கவுரவ படுத்தினார். பின்னர் விழாவில் பேசிய அவர், நம்முடைய கூட்டம் மற்றவர்களுக்காக வாழ்க கோஷம் போட்ட காலம் முடிந்து நமக்கு நாமே வாழ்க கோஷம் போடும் நாள் விரைவில் வர உள்ளதாக பேசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com