மகனின் ஆசையை நிறைவேற்ற மேடையில் வைத்தே காது குத்திக்கொண்ட தந்தை - வைரலாகும் வீடியோ
சிவகங்கையில் 10 வயது மகனுக்கு நடைபெற்ற காதுகுத்து விழாவில், மகனின் ஆசைக்காக 45 வயது தந்தையும் அதே மேடையில் காது குத்திக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் சேகர் என்பவர், தனது மகனுக்கு காது குத்தும் விழா நடத்துவதற்காக சொந்த ஊர் வந்துள்ளார். அப்போது காதுகுத்தும் விழா மேடையில் வைத்து தந்தையும் தன்னோடு காது குத்த வேண்டும் என்று சிறுவன் அடம்பிடித்துள்ளார். இதையடுத்து மகனின் ஆசையை நிறைவேற்ற சேகரும் அதே மேடையிலேயே அமர்ந்து காது குத்திக்கொண்டார்.
Next Story
