Sivagangai | Thunder | திடீரென தாக்கிய மின்னல் - துடிதுடித்த பெண்கள்.. சிவகங்கையில் அதிர்ச்சி

x

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி பெண்கள் இருவர் படுகாயமடைந்தனர். பழையனூர் அருகே வயல்சேரி மரக்குளம் கிராமத்தில் வயல் வேலை செய்து விட்டு சிலர் அருகே அமைக்கப்பட்ட கொட்டகையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில், கொட்டகையில் தங்கி இருந்த கீழராங்கியம் காலனியை சேர்ந்த அமிர்தவள்ளி மற்றும் அன்பரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்