பள்ளி முன்பு திடீர் மறியலில் ஈடுபட்ட பெற்றோர் | சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கை அருகே உள்ள சொக்கநாதபுரத்தில் செயல்படும், அரசு பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்களுடன் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருபவர் கணேசன். இவர் மாணவர்களிடம் அரசியல் பேசுவதாகவும், சாதியம் சார்ந்த கருத்துகளை பகிர்ந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சக ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கல்லல் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
Next Story
