Sivagangai | பெட்ரோல் குண்டு வீசிய கயவர்களை டூப் Voice-ஆல் தலை தெறிக்க ஓடவிட்ட மூதாட்டி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மூதாட்டி தனியாக வசிக்கும் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். கே.பெத்தனேநந்தல் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி வீராயி, வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன்கள் வெளியூரில் உள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வீராயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். வீட்டில் தனது மகன்கள் இல்லை என்றாலும், சாதுரியமாக செயல்பட்ட மூதாட்டி, “வேல் கம்பை எடு, அருவா எடுத்துட்டு போ“ என சத்தமிட்டுள்ளார். இதனால் வீட்டில் ஆண்கள் இருப்பதாக எண்ணி, குற்றவாளிகள் தெறித்து ஓடி உள்ளனர். நகையை பறிப்பதற்காக மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக, வீராயியின் மகன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Next Story
