

சிவகங்கை சுப்பிரமணியபுரம் பகுதியில் கணவனால் கைவிடப்பட்டு தனது இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்தார் ராதா என்ற பெண பொறியியல் பட்டதாரியான ராதாவின் மகன் சண்முகநாதன் வேலைக்கு செல்லாமல் தனது தாயிடமே பணம் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியான பேச்சுமுத்துவை வீட்டு சிறையில் வைத்து 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து இருவரையும் மீட்டுள்ளனர். பின்னர், சண்முகநாதனை புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என விசாரணை செய்து வருகின்றனர்.