Sivagangai | ரூ.60 கரண்ட் பில் வந்த இடத்தில் ரூ.6000 - இதற்கு மின் ஊழியர்கள் சொன்ன பதில்தான் ஷாக்கே
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே, ஓட்டு வீட்டில் வசிக்கும் முதிய தம்பதியருக்கு, சுமார் 6 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான கோட்டைச்சாமி - முனியம்மாள் தம்பதியர், இரு மாதங்களுக்கு ஒரு முறை, ஏழு ரூபாய், 45 ரூபாய், 65 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், நவம்பர் மாதத்தில் 5 ஆயிரத்து 967 ரூபாய் மின் கட்டணம் வந்ததால், அதுகுறித்து துணைமின் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து ஆய்வு செய்த ஊழியர்கள், மின் மீட்டரில் பழுது இல்லை என்றும், மின்சாரம் பயன்படுத்தியதற்கான கட்டணம் தான் இது என்றும் கூறி, கட்டணத்தை செலுத்த வலியுறுத்தினர்.
Next Story
