Sivaganga | TN Police | குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண்களிடம் 60 சவரன் வழிப்பறி?

குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண்களிடம் 60 சவரன் வழிப்பறி?

குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண்களிடம் 60 சவரன் வழிப்பறி?

சிவகங்கை மாவட்டத்தில் குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண்களிடம் 60 சவரன் நகையை வழிப்பறி செய்த மர்மநபர்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் சிவகங்கை எஸ்.பி.அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் குழலாவயல் கிராமத்தை சேர்ந்த முருகன் மற்றும் பாபு குடும்பத்தினர் கடந்த 24ஆம் தேதி, தாயமங்கலம் அருகே உள்ள நாகமுகந்தன்குடி கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த கோயிலுக்கு வந்த மர்மநபர்கள், முதியவர் ஒருவரை வெட்டிவிட்டு பெண்களிடம் இருந்த 60 சவரன் நகையை வழிப்பறி செய்தததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளையான்குடி போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்காததால், சிவகங்கை எஸ்.பி.அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com