தேசியக்கொடி ஏற்றிய ஆட்சியர்... மருது பாண்டியர்களுக்கு அமைச்சர்கள் மரியாதை

மருது பாண்டியர்களின் 223-வது நினைவு தினத்தை ஒட்டி, அவர்களது சிலைக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவை தேசியக்கொடி ஏற்றி சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி உள்ளிட்ட பலர் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மதுரை ஆதினம் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்திய நிலையில், பாதுகாப்பு பணியில் சுமார் இரண்டாயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com