

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் அனைத்து தமிழர்களின் வாழ்வியல், கலை, பண்பாடு, அறிவியல் கலாச்சாரம், மொழி என பல துறை சார்ந்த படைப்புகள் காட்சி படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பார்வையிட வந்த பெற்றோர்கள், பொதுமக்களுக்கு, மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரியம் குறித்து எடுத்து கூறி வியப்பளித்தனர்.