தங்கையை காப்பாற்ற சென்ற அக்கா பலி - சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, மின்சாரம் தாக்கிய தங்கையை காப்பாற்றச் சென்ற அக்காள், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லங்காலப்பட்டி கிராமத்தில் தனியார் நிலத்தில் உள்ள கிணறு ஒன்றில், 8ம் வகுப்பு மாணவி திவ்யா, அவரது தங்கை சிவரஞ்சனி இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள மோட்டார் பம்ப் செட்டில், சிவரஞ்சனியின் ஈரத்துணி பட்டு மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது. உடனே அவரை காப்பாற்ற முயன்ற போது, திவ்யா மீது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். காயமடைந்த சிவரஞ்சனி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்