Sirkali | Voter ID | குப்பையில் குவியல் குவியலாகக் கிடந்த வாக்காளர் அடையாள அட்டை | ஷாக்கில் மக்கள்
Sirkali | Voter ID | குப்பையில் குவியல் குவியலாகக் கிடந்த வாக்காளர் அடையாள அட்டை | ஷாக்கில் மக்கள் குப்பைத் தொட்டியில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே குப்பைத் தொட்டியில் வாக்காளர் அட்டை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள குப்பைத் தொட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் குவியல் குவியலாகக் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது பல வாக்காளர்கள் அடையாள அட்டை கிடைக்காமல் சிரமப்பட்ட நிலையில், அரசு அலுவலகத்திற்கு அருகிலேயே இத்தனை அட்டைகள் குப்பையில் கொட்டப்பட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதில், அப்பகுதி மக்கள் தங்களது குடும்பத்தினரின் அடையாள அட்டைகளையும் கண்டறிந்து ஆச்சரியமடைந்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
