பூட்டிய வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை : ரூ. 2 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை

சீர்காழி அருகே பூட்டிய வீட்டில் 70 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தடயத்தை கண்டுபிடிக்க முடியாதபடி, துணி சோப்பு பவுடரை தூவி விட்டு சென்றுள்ளனர்.
பூட்டிய வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை : ரூ. 2 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை
Published on

சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் சுனாமி நகரை சேர்ந்தவர் இளையராஜா. குடும்பத்தினருடன் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்த அவர், வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் நகைகள், 2 லட்சம் ரொக்கம் திருடி போயிருப்பது தெரியவந்தது. போலீசார் தடயத்தை கண்டுபிடிக்க முடியாதபடி துணி சோப்பு பவுடரை வீடு முழுவதும் கொள்ளையர்கள் தூவி சென்றுள்ளனர். இதுதொடர்பாக சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com