"சார் இங்க பலாப்பழம் எங்க தொங்குது" ரவுண்ட்ஸ் வரும் ஜானி.. அச்சத்தில் உறைந்த மக்கள்
Elephant Video | "சார் இங்க பலாப்பழம் எங்க தொங்குது" ரவுண்ட்ஸ் வரும் ஜானி.. அச்சத்தில் உறைந்த மக்கள்
குன்னூர் அருகே இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ள ஒற்றை காட்டுயானையால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால், சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், ஜானி என்ற ஒற்றை கொம்பு காட்டு யானை, குன்னூர் - மேட்டுப்பாளையத்திற்கு இடைப்பட்ட தேயிலை காடுகளில் முற்றுகையிட்டுள்ளது. வனத்துறை அதனை விரட்ட போராடி வரும் நிலையில், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story
