SIR | Voter List | தமிழகம் முழுவதும் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - துல்லியமாய் வெளியான லிஸ்ட்

x

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்குப் பிறகு அதிகபட்சமாக சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள அரசு குறிப்பின்படி, காஞ்சிபுரத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 274 பேரும், செங்கல்பட்டில் 7 லட்சத்து ஆயிரத்து 871 பேரும், திருவள்ளூரில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 777 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 162 பேரும், வேலூரில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 25 பேரும், விழுப்புரத்தில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 865 பேரும், கள்ளக்குறிச்சியில் 84 ஆயிரத்து 329 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூரில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 739 பேரும், ராணிப்பேட்டையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 157 பேரும், அரியலூரில் 24 ஆயிரத்து 368 பேரும், கடலூரில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 818 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் 75 ஆயிரத்து 378 பேரும், நாகப்பட்டினத்தில் 57 ஆயிரத்து 338 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 49 ஆயிரத்து 548 பேரும், புதுக்கோட்டையில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 587 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 503 பேரும், திருச்சியில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 787 பேரும், திருவாரூரில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 480 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 81 ஆயிரத்து 515 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 894 பேரும், கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 690 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 429 பேரும், கிருஷ்ணகிரியில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 549 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 706 பேரும், நீலகிரியில் 56 ஆயிரத்து 91 பேரும், நீக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 பேரும், திருப்பூரில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பேரும், கன்னியாகுமரியில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 373 பேரும், மதுரையில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 474 பேரும், ராமநாதபுரத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 364 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டடுள்ளனர். சிவகங்கையில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 828 பேரும், தேனியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 739 பேரும், தூத்துக்குடியில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 527 பேரும் திருநெல்வேலியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 957 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 902 பேரும், விருதுநகரில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 964 பேரும், நீக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்