"SIR - மாஞ்சோலை மக்களின் வாக்கு பறிப்பு?" போராட்டத்தில் குதித்த மக்கள்
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை கிராமத்தில் வாக்காளர்களிடம் எஸ்ஐஆர் படிவங்கள் பெற்று பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், தங்களது வாக்குகளை இல்லை என மாவட்ட நிர்வாகம் சொல்வதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டு மிரட்டுவதாகவும், தங்கள் வாக்குகளை மாஞ்சோலையில் இருந்து அகற்ற முயற்சிப்பதாகவும் மனு அளித்துள்ளனர். வரும் 20ம் தேதி இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து, தங்கள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டையை ஒப்படைக்க உள்ளதாகவும் பேராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
