Sipcot Tech Park | தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு உருவாகும் வேலைவாய்ப்பு

x

தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் சிப்காட் தொழில் பூங்கா

தமிழகத்தில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் 40 தொழில் பூங்காக்கள் உள்ள நிலையில் மேலும் 21 இடங்களில் 21,404 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இதன்படி, பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கத்தில் 530 கோடி ரூபாயில் 422 ஏக்கரில் தொழில் பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மேலூர் அருகே 68 கோடி ரூபாயில் 278 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்