Singappen Special Force | சிங்கப்பெண்களின் அதிரடி ஆக்ஷன்.. 5 குழந்தைகள் மீட்பு..
சிங்கப்பெண்களின் அதிரடி ஆக்ஷன்.. 5 குழந்தைகள் மீட்பு..
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பெரியகுப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த 5 குழந்தைகளை சிங்கப்பெண் அதிரடிப் படையினர் மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் கவிதா, குழந்தைகள் வேலை செய்வதை கண்டு விசாரணை நடத்தியபோது, வறுமை காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வேலை செய்து வந்ததும், ஆதார் அட்டை உள்ளிட்ட அடிப்படை ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் வாணியம்பாடியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கான ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஏற்பாடு செய்து, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
