நடுரோட்டில் அசிங்கம்.. `சிங்கம்' படம் துணை நடிகர்களின் அதிர்ச்சி காட்சி

x

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மதுபோதையில் ரகளை செய்து, போலீசாரை மிரட்டிய இரட்டை சகோதரர்களான சினிமா துணை நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்களான பாரதிராஜா, பாரதமணி ஆகியோர், சூர்யா நடித்த சிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லன்களாக நடித்துள்ளனர். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில், சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்த எடையூர் காவல் நிலைய காவலர் தனபால் என்பவரிடமும், தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாரதிராஜா மற்றும் பாரதமணியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, காவலரை இவர்கள் மிரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்