நெல்லையில் தடை செய்யப்பட்ட அன்சருல்லா அமைப்பைச் சேர்ந்த திவான் முஜுபூர் என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வு முகமை கூறியுள்ளது.