Kovai | TN Police | கோவை ஆடிட்டர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு - 6 பேர் கைது

கோவை ஆடிட்டர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு - 6 பேர் கைது

Kovai | TN Police | கோவை ஆடிட்டர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு - 6 பேர் கைது

கோவையில் ஆடிட்டர் வீட்டில் 16 கிலோ வெள்ளி மற்றும் பித்தளைப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், 6 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆடிட்டர் சேஷகிரி, குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்த நிலையில், வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி கோவை திரும்பியபோது, வீட்டின் சமையலறையில் இருந்த 9 கிலோ வெள்ளிப் பொருட்களும், பூஜையறையில் இருந்த 7 கிலோ பித்தளைப் பொருட்களும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ், ராஜசேகர், டேவிட், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com