சித்த மருத்துவ முகாம் - நோய் தீரும் வரையில் மருந்து இலவசம்

வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், சித்தாவரம் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் சார்பில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. சித்த மருத்துவர் D.பாஸ்கரனின் சித்தாவரம் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையும், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஆகியோர் இணைந்து நோய் தீரும் வரையில் சித்த மருத்துவம் என்று மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சியை நடத்தினர். சித்த மருத்துவத்தின் அடிப்படை நோக்கமான 'வரும் முன் காப்போம்' என்பதை வலியுறுத்தி இந்த முகாமில் ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பெண்களின் உடல் சார்ந்த பிரச்சனைகள், புற்றுநோய் போன்ற அனைத்து பிரச்சனைகள் உள்ளவர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், மருந்துகளையும் பெற்றனர். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு ஒரு நாள் மட்டுமல்லாமல் நோய் தீரும் வரையில் மருந்துகளை விலையின்றி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பரவலாக மக்கள் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com