Uthangarai | Krishnagiri | SI மண்டையை உடைத்த இளைஞர்... ரத்தம் சொட்ட சொட்ட... பதற வைக்கும் காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, காவல் நிலைய ஆய்வாளரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டிபட்டி கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அங்கு வெடித்த பட்டாசின் காரணமாக, பள்ளி பேருந்தின் கண்ணாடி உடைந்து இரண்டு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், சம்மந்தப்பட்ட நபரான தென்னரசு என்பவரை கைது செய்தார். இதனால் ஆத்திரடைந்த அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவர் காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் மீது கல்லை வீசிய நிலையில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை தொடர்ந்து அருண் கைது செய்யப்பட்டார். ஆனந்தூர் அம்மன் கோயில் அரசு மதுபான கடையால்தான் இது போன்ற பிரச்னைகள் வருவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த சம்பவத்தில் மேலும் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.