

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் ஜனவரி 8 ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஷாகுல் நவாஸ், புதுக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.