SI | Exam | ஆயிரம் பணியிடங்களுக்கு போட்டி போட்ட லட்சக்கணக்கானோர்
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, குருநானக் கல்லூரி, மாநிலக் கல்லூரி என 22 மையங்களில் 21 ஆயிரத்து 69 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.
இதையடுத்து தேர்வு மையத்தை சுற்றிலும் 2 ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், எஸ்.ஐ. தேர்வு எழுத வந்தவர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப் பட்டனர். எலக்ட்ரானிக் சாதனங்கள் செல்போன்கள் வைத்திருக்கிறார்களா என கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பெண்களுக்கு தனி இடம் அமைத்து சோதனை நடைபெற்றது.
மதுரை மாநகரில் 8 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 403 பேர் எஸ்.ஐ.பணிக்கான தேர்வு எழுதி வருகின்றனர். மதுரை மாநகர் திருப்பாலை யாதவா மகளிர் கல்லூரியில் பெண் தேர்வர்கள் மட்டும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள மூன்று மையங்களில் மூன்றாயிரத்து 800 பேர் தேர்வு எழுது வருகின்றனர். தேர்வு எழுதும் மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 46 மையங்களில் எஸ்.ஐ. பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
