அரசு மருத்துவமனையில் மரபணு ஊசி தட்டுப்பாடு.. உடனடி ஆக்ஷன் எடுத்த அமைச்சர்
மரபணு ஊசி - கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்
உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு ஏற்பட்ட மருந்து தட்டுப்பாட்டை, நிவர்த்தி செய்த அமைச்சருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் - ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு சஞ்சீவ் என்ற 11 வயது மகன் உள்ள நிலையில், அவர் மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு மரபணு ஊசி மூலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் மரபணு ஊசி தட்டுப்பாடு ஏற்பட்டு, பெற்றோர் தவித்து வந்தனர். இது குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், மறுநாளே மருத்துவமனையில் தேவையான மரபணு ஊசிகள் வழங்கப்பட்டன. சுமார் 22 குழந்தைகளுக்கு தற்போது மீண்டும் மரபணு ஊசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
