கடை வைத்திருப்பவர்களே உஷார்!!!

x

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மோசடி - 2 பேர் கைது

திருச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் ஆனந்தின் கடைக்கு வந்த இரண்டு பேர் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் என கூறி 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்து சென்றுள்ளனர். அந்த நபரகள் மீது சந்தேகம் அடைந்த ஆனந்த் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பாலசந்திரன் மற்றும் வெங்கடாசலம் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள விஸ்வநாதன் என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்