சரியான நேரத்தில் குறிவைத்து சுட்டு தள்ளிய கோவை போலீஸ்

x

கோவை மாநகர போலீசின் 35ம் ஆண்டு விழாவை முன்னிட்டு போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. கோவை மாவட்ட மாநகர போலீஸ் தொடங்கப்பட்டு, 35ம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. இந்த நிலையில் போலீசார் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.கோவை மாநகரில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்