உயிரோடு இருக்கும் மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் போட்ட மருமகன்!! அதிர்ச்சி சம்பவம்
திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு மருமகன் கண்ணீர் அஞ்சலி போஸ்ட் போட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி புகார் அளித்துள்ளார். கணவன் - மனைவி இடையேயான பிரச்சினையால், மனைவி வினோதினி தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் மனைவியை தாக்கி மண்டையை உடைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மாமியார் இறந்துவிட்டதாக, வெங்கடேசன் தனது உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியுள்ளார். இதை தொடர்ந்து கணவர் வெங்கடேசனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆபத்து உள்ளதாக கூறி, மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Next Story
