இணையத்தில் வைரலாகும் மூதாட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Kallakurichi | Viral Video | இணையத்தில் வைரலாகும் மூதாட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி விட்டு, தன்னை அலைக்கழித்து வருவதாக மூதாட்டி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். நயினார் பாளையத்தை சேர்ந்த மூதாட்டி பெரியம்மாளுக்குச் சொந்தமான நிலத்தை, பெரியசாமி என்பவர் அபகரிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில், பெரியம்மாளுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதிலும், பெரியசாமியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருடைய பெயருக்கு கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் பட்டா மாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது பெயருக்கு பட்டா மாற்றும்படி, மூதாட்டி பெரியம்மாள் விண்ணப்பித்தபோது, அவரிடம் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு, பெயர் மாற்றம் செய்யாமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி வெளியிட்ட வீடியோ வலைதளத்தில் பரவி வருகிறது.
