சென்னையில் குற்றவாளி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
சென்னையில், சரித்திர குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போது, அவர் பிளேடால் வயிற்றில் கிழித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொத்தவால்சாவடி பகுதியைச் சேர்ந்த வேலு எனப்படும் வேல்முருகனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் திடீரென பிளேடால் தனது வயிற்றில் இரண்டு இடங்களில் கிழித்துக் கொண்டு அலறி துடித்தார்.
உடனடியாக போலீசார் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில், "என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்ய முயற்சித்துள்ளனர்" என்று கூறி, வேல்முருகன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Next Story
