போலி தேன் தயாரிக்கும் அதிர்ச்சி வீடியோ உஷார் மக்களே..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிஷ்கிந்தா பகுதியில் வடமாநில கும்பல் ஒன்று சர்க்கரை, படிகார கற்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி போலி தேன் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். மேலும், இது போன்ற போலி கும்பல்களிடமிருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
