பணம் கேட்டு மிரட்டல்... வெளியான ஷாக் வீடியோ - விசிகவினர் மீது பாய்ந்தது வழக்கு
பொதுக் கூட்டத்திற்கு பணம் கேட்டு பர்னிச்சர் கடை உரிமையாளரை மிரட்டிய வீடியோ வெளியான நிலையில் விசிகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூரில் புலிவலம் பகுதியில் ஜெயபாலன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சென்ற விசிக ஒன்றிய செயலாளர் பூபாலன் உள்ளிட்ட 3 நிர்வாகிகள் பொது க்கூட்டத்திற்கு நிதி வசூல் செய்ய சென்ற போது, கடை ஊழியர்கள் பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியானது.
Next Story
