பெண் காவலரை மிரட்டிய பார் ஊழியர் வெளியான பரபரப்பு வீடியோ
சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த தனியார் மதுபான பார் ஊழியர் ஒருவர், பெண் காவலரை மிரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகின.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் உள்ள தனியார் பாரில் பணியாற்றும் ஈஸ்வரன் என்பவர், மது போதையில் கையில் ரத்தக்காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அப்போது அங்கிருந்த ஊழியர் மற்றும் பணியில் இருந்த பெண் காவலர், காயம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன்,
மருத்துவர் அறைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆண் காவலர் சமாதானம் செய்ய முயன்றும் பலனளிக்காத நிலையில், மருத்துவமனை ஊழியர் மற்றும் பெண் காவலரை மிரட்டியது நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story
