திடீரென மயங்கி விழுந்து பலியான இளைஞர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

x

உத்தரப்பிரதேசத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், 25 வயது இளைஞர் சாலையில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த மக்கள், அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞர் முஹல்லா பாடி பகுதியைச் சேர்ந்த ரெஹான் குரேஷி என்பதும், ஏழு மாதங்களுக்கு முன்புதான் திருமணமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்