ரூ.25 கூடுதலாக வசூலித்த பிரபல பேக்கரிக்கு ஷாக்கிங் உத்தரவு

x

இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ பாதாம் பிஸ்தா ரோலை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல இனிப்பகத்தில், கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர், கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோலை வாங்கிய போது, அவரிடம்

425 ரூபாயை வசூலிப்பதற்கு பதில் 450 ரூபாயை வசூலித்துள்ளனர். 30 நிமிட வாதத்திற்கு பிறகு தமக்கு 25 ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி என ரவிசங்கர் சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். புகார் மனுவை விசாரித்த ஆணையம், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை ஆற்றுப்படுத்தும் வகையில் 15 நாட்களில் ஒரு கிலோ பாதாம் பிஸ்தா ரோல் இனிப்பை அவரது வீட்டுக்கே சென்று வழங்க வேண்டுமென இனிப்பகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்