குலை நடுங்க வைக்கும் கொலை சம்பவம் - தோழியை கொடூரமாக கொன்ற பெண்
பணத்திற்காக தோழியை கொலை செய்த பெண் கைது
சாயல்குடி அருகே பணத்திற்காக தோழியை, பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம். கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் உத்திரவள்ளி. இவரது தோழி ஜோதி என்பவர் உத்தரவள்ளியிடம் கடனாக பணம் கேட்டபோது தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதி உத்தரவள்ளியை விரகு வெட்டும் வேலைக்கு அழைத்து செல்வது போல் கரிசல்குளம் ஓடை பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்து விட்டு, 4 சவரன் நகையை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து உத்தரவள்ளியின் உடலை கைப்பற்றிய போலீசார் தோழி ஜோதியை கைது செய்தனர். உத்தரவள்ளி கடைசியாக ஜோதியுடன் சென்றதை பார்த்த உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொலையாளி ஜோதியை பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
