வங்கியில் இருந்து வந்த அதிர்ச்சி கடிதம் - தலை சுற்றி போன மக்கள்

கொண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் மற்றும் சுப்பிரமணியன். விவசாய கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு, வங்கி ஒன்றில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வங்கியில் இருந்து அவர்கள் பயிர்க்கடனாக ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை ஜூன் 13-ஆம் தேதியில் இருந்து பின் தேதியிட்டு செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், விவசாய நிலமே இல்லாத தங்களுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டிருப்பதாக வங்கியில் இருந்து வந்த கடிதத்தால் குழப்பமடைந்த அவர்கள், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com