உலுக்கிய கொல்கத்தா தீ விபத்து - ஊர் மந்தையில் வைக்கப்பட்ட3 உடல்கள்.. கதறி அழுத மக்கள்
கொல்கத்தாவில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று தமிழர்களின் உடல் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. ஊர் மந்தை முன்பு வைக்கப்பட்ட மூவரின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பங்கேற்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Next Story
