சென்னை வடபழனியில் அதிர்ச்சி - அடித்தே கொல்லப்பட்ட கொடூரம்
சென்னை வடபழனியில் அதிர்ச்சி - அடித்தே கொல்லப்பட்ட கொடூரம்
வடபழனி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஹார்டுவேர் கடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை ஆதம் நகரை சேர்ந்த பரந்தாமன் வடபழனியில் ஹார்டுவேர் கடையில் பணிபுரிந்து வந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது பரந்தாமனிடம் மது போதையில் இருந்த மூன்று பேர் வீண் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த பரந்தாமன் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு மூன்று பேரையும் கைது செய்தனர்.
Next Story
