வளர்ப்பு மகளிடம் தொடர்ந்து தந்தை செய்த அசிங்கம் - குமரியில் அதிர்ச்சி

x

கன்னியாகுமரி அருகே வளர்ப்பு மகளை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றதாக தேமுதிக பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தக்கலை அடுத்த கருக்கன்குழி பகுதியை சேர்ந்த தேமுதிக நிர்வாகியான செந்தில்நாகராஜன், வளர்ப்பு மகளான 16 வயது சிறுமியை பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி செந்தில்நாகராஜன் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்