சென்னை சென்ட்ரலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
டிக்கெட் முன்பதிவு செய்வதாக கூறி, செல்போன் பறித்துச் சென்ற ராஜஸ்தான் இளைஞர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் ராம்தயாள். இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், டிக்கெட் இல்லாமல் வரும் வடமாநில பயணிகளிடம் இந்தியில் பேசி, டிக்கெட் பதிவு செய்து தருவதாக கூறி பயணிகளின் செல்போனை வாங்கிக்கொள்வார். பின்னர், “சிக்னல் கிடைக்கவில்லை” என வெளியே வர கூறி, கவனத்தைத் திசை திருப்பி, செல்போனுடன் தப்பிச் சென்றுவிடுவார்.
இப்படி, திருடிய செல்போன்களை திருவல்லிக்கேணியில் உள்ள நௌஷாத் என்பவரிடம் விற்றுவந்துள்ளார்.
இது தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 22 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
