Krishnagiri | Theft | பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - தீயாய் பரவும் வீடியோ

x

கிருஷ்ணகிரி மாவட்டம் பகலூரில் பட்டப்பகலில் காரில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. தோக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளி ஆறுமுகம், பணத்துடன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், காரில் இருந்த 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். நெசவுத் தொழிலாளி அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் போலீசார், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்