ஹோட்டலில் தூங்கிக் கொண்டு இருந்தவர்களுக்கு ஜெனரேட்டரால் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

x

கத்திப்பாரா அருகே தனியார் விடுதியில் இருந்த ஜெனரேட்டர் ஒன்றில், தீடிரென ஏற்பட்ட புகையால் 8 பேருக்கு ​மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த கத்திப்பாரா ஜி.எஸ்.டி சாலையில் தனியார் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இதில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜெனரேட்டரில் இருந்து தீடிரென ஏற்பட்ட புகையால், 8 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களை​ மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையில் மின்கசிவு காரணமாக புகை​ ஏற்பட்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்