தாடை கிழிந்து வலியில் துடித்த வாகன ஓட்டி மேம்பாலத்தில் டூவீலரில் சென்ற போது அதிர்ச்சி
சென்னை மூலக்கடை மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் தனியார் ஊழியர் சென்ற போது, திடீரென மாஞ்சா நூல் ஒன்று முகத்தில் பட்டதில், ஊழியரின் கீழ் தாடை அறுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
67 வயதான பிரகாஷ் ஜெயின் கீழ்தாடை அறுந்து வண்டியிலிருந்து கீழே விழுந்து வலியால் துடித்துள்ளார்.உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், முகத்தில் தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட தடை அமலில் உள்ள நிலையில், எல்லாவற்றையும் மீறி மீண்டும் மாஞ்சா நூல் கலாச்சாரம் உருவெடுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சாடி வருகின்றனர்.
Next Story
