அதிர வைத்த கேங்... 200 சிசிடிவி; சல்லடை போட்டு சுற்றிவளைத்த போலீஸ்
சென்னை ஆவடியில் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடிய கொள்ளையர்கள் சிக்கினர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்த குமார், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது பண்ணையிலிருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள 4 ஆடுகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசில் புகார் அளித்தார். சுமார் 200 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பாபு, விமல்ராஜ் மற்றும் ராஜகோபால் ஆகியோர் ஆடுகளை திருடியது தெரியவந்தது. கால்நடை வளர்ப்பு அதிகமாக இருக்கும் இடங்களை நோட்டமிட்டு திருடி வந்ததும், நெற்குன்றத்தில் இருக்கும் பாபுவின் கறிகடைக்கு ஆட்கள் அதிகளவில் வருவதால், இந்த திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து திருடப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
