எண்ணூர் பகுதி மக்கள் அதிர்ச்சி புகார்
எண்ணுர் பகுதியில் உள்ள உர ஆலையில் இருந்து வெளி வரும் நச்சு துகள்களால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு எண்ணூர் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதே தொழிற்சாலையில் இருந்து நச்சு துகள்கள் காற்றில் பரவி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் இங்கு வாழும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story
