"அந்த கரண்ட் பாக்ஸ் ரொம்ப நாளா..." -சிறுவனின் தந்தை அதிர்ச்சி பேட்டி

x

சென்னை அரும்பாக்கத்தில்,தேங்கிய மழை நீரில் நடந்து சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில், அந்த வழியாக சென்ற நபர் துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 16 ஆம் தேதி மங்களம் நகர் வழியாக தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற பள்ளி சிறுவன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் கீழே விழுந்து துடிதுடித்த சிறுவனை அந்த வழியாக பைக்கில் சென்ற இளைஞர் துரிதமாக செயல்பட்டு மீட்டார். இதுதொடர்பான காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மின் மாற்றிகளை உரிய முறையில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்