கோவையில் 4 கல்லூரி மாணவர்கள், சிறுவன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல் - வைரலாகும் வீடியோ

x

ஓடும் ரயில் மீது கல் வீசுவது மற்றும் தண்டவாளத்தில் கல் வைத்து வீடியோ எடுத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆவரம்பாளையம் பகுதியில் அதிகாலையில் ரயில்கடக்கும் போது தண்டவாளத்தில் சில இளைஞர்கள் கல் வைத்துள்ளனர். மேலும், நீலகிரி விரைவு ரயிலை நோக்கி கல்விசியதில் ரயில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, தனியார் கல்லூரியை சேர்ந்த கரண், ஜெகதீசன், சாரதி உள்ளிட்ட நான்கு மாணவர்களும், ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மாணவர்கள் 4 பேருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.


Next Story

மேலும் செய்திகள்